சிவகங்கையில் 123 மி. மீ. மழை பதிவு
சிவகங்கையில் 123 மி.மீ. மழை பதிவானதாக மாவட்ட பேரி டர் மேலாண்மைத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, சிவகங்கை நகரில் காந்தி வீதி, பேருந்து நிலையம், தெற்கு ராஜ ரத வீதி உள்ளிட்ட முக்கிய ”வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி புது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத் தில் சிவகங்கையில் அதிகபட்சமாக 123 மி.மீ. மழை பதிவானது.
இதேபோல, காளையார்கோவிலில் 70 மி.மீ., திருப்புவனத்தில் 60 மி.மீ., காரைக்குடியில் 30 மி. மீ., மானாமது ரையில் 20 மி.மீ, திருப்பத்தூரில் 19 மி. மீ., தேவகோட்டையில் 11 மி. மீ. மழை பதிவானதாக மாவட்ட பேரிடர் மேலாண் மைத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.