சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் கொண்டாடப்பட்டது.அதையொட்டி காட்டுப்பரமக்குடி பகுதியில் உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் குரு.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றனர். திரைப்பட நடிகர் ஆனந்தராஜ், அனைத்து வெள்ளாளர் மகாசபையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், உயர் மட்ட நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் இருளப்பன், உயர்மட்ட குழு நிர்வாகி முனியாண்டி, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நிர்வாகிகளும், ஓ.பி.எஸ் அணியின் சார்பில் தர்மர் எம்.பி. தலைமையில் நிர்வாகிகளும், அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சதன்பிரபாகர், நகர் தலைவர் ஜமால் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.