Thursday, September 21, 2023
Homeஆன்மிகம்161 அடி உயர ஆஞ்சநேயர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

161 அடி உயர ஆஞ்சநேயர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

161 அடி உயர ஆஞ்சநேயர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிதனகரே பசவேஷ்வரா மடம் சார்பில் நிறுவப்பட்ட 161 அடி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைத்து, மாநிலத்திற்கு இனி நல்ல காலம் வரும் என கூறினார்.

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் பிதனகரே பகுதியில் இந்த 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் பிதனகரே அமைந்துள்ளது.

இப்பகுதியில் நவராத்திரி மற்றும் ராமநவமி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள பிதனகரே பசவேஷ்வரா மடம் சார்பில் தான் தங்க நிறத்திலான 161 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அச்சிலையை திறந்து வைத்து முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: பஞ்சமுகி ஆஞ்சநேயர் என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனுமனின் சிறப்பு வடிவம்.

உலக நலனுக்காக அனுமன் இந்த வடிவத்தை எடுத்தார். அனுமனின் 161 அடி உயர சிலை கர்நாடகாவில் நிறுவப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம்.

இச்சிலையை சிற்பிகள் அற்புதமாகச் செய்திருக்கிறார்கள். இப்பகுதியில் ராம நவமிக்காக பல புனித பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நாட்களில் இப்பகுதி மிகப்பெரிய வளர்ச்சியை காணும். மாநிலத்திற்கும் நல்ல காலம் வர இருக்கிறது. என கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments