பரமக்குடியில் அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதி இருவர் காயம்
பரமக்குடி காக்கா தோப்பு சர்விஸ் ரோடு ஜங்ஷன் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகன மோதியதில் 2 பேர் காயம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி இவரும் இவரின் தோழியான சுஜிதாவும் பரமக்குடி அரசு கல்லூரியில் படித்து வருகின்றனர் கல்லூரி முடித்து வீட்டிற்கு செல்ல வேண்டி அவரது இருசக்கர வாகனத்தில் சுஜிதா இருசக்கர வாகனத்தை ஓட்டியும் சங்கரேஸ்வரி இருசக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளனர். பரமக்குடி காக்கா தோப்பு சர்விஸ் ரோடு ஜங்ஷன் அருகே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து சங்கரேஸ்வரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். மோதியதில் சங்கரேஸ்வரி மற்றும் சுஜிதாவுக்கு காயம் ஏற்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.