மும்பை:புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, பங்குச் சந்தையில் இம்மாதத்தின் முதல் மூன்று அலுவல் நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 27,142 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
கடந்த வாரம் சந்தையின் மூன்று வர்த்தக நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.27,142 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர், அதே சமயம் வெளிநாட்டு முதலீடுகள் செப்டம்பர் மாதத்தில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூ.57,724 கோடியை எட்டியது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்டவையே அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பதற்கு பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன.
ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.34,252 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருந்தாலும், ஜூன் முதல் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்து வந்தனர். ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களைத் தவிர, இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர் என்று தரவு தெரிவிக்கிறது.