ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் அக். 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்,2, எப்.எல்.3 உரிமம் பெற்ற ஏ.சி மதுபான விற்பனை கூடங்கள் மூடப்படும்.
விடுமுறையை பயன்படுத்தி விதிமுறைகளை மீறி மதுபானங்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்தாலோ, சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மது வகைகளை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.