Sunday, May 28, 2023
Homeபரமக்குடிபரமக்குடியில் எம்.ஜி.ஆர்.ரின் 35 வது நினைவு நாள் அனுசரிப்பு 

பரமக்குடியில் எம்.ஜி.ஆர்.ரின் 35 வது நினைவு நாள் அனுசரிப்பு 

பரமக்குடியில் எம்.ஜி.ஆர்.ரின் 35 வது நினைவு நாள் அனுசரிப்பு 

பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.ரின் 35 வது நினைவு நாள் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்.ரின் 35 வது நினைவுநாள்

பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.ரின் 35 வது நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தர்மர் எம்.பி.தலைமை தாங்கினார். பரமக்குடி நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்பு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தது. அங்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்டமன்ற தொகுதி செயலாளர் கலந்து கொண்ட நிகழ்ச்சி

இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் வக்கில் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர் ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments