பரமக்குடியில் 400 ஆண்டுகள் பழமையான சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம், மதுரை அழகர் கோவில் விழாக்களைப் போன்று வருடம் முழுவதும் நடப்பது சிறப்பாகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ஜுன். 26 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
இன்று காலை வைகை ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களின் வேதங்கள் வழங்க கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்களின் கோவிந்தா கோசம் விண்ணை முட்டியது. தொடர்ந்து சுந்தர்ராஜ பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மானேஜிங் டிரஸ்டி நாகநாதன், டிரஸ்டி மற்றும் டிரஷரர் பாலமுருகன், டிரஸ்டி நாகநாதன், டிரஸ்டி கோவிந்தன், டிரஸ்டி முரளிதரன் ஆகியோர் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.