இதயம்
- ஒவ்வொரு மனிதனின் இதயமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
- இதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் பேருதவி புரிகிறது.
- இதில் இருக்கும் லாரிக் அமிலம் இதய ரத்த குழாய்கள் மற்றும் உடலில் எல் .டி. எல் எனப்படும்.
- கொலஸ்ட்ரால் கொழுப்பை அதிகம் சேராமல் தடுத்து உடல் நலனை பாதுகாக்கிறது.
புண்கள், காயங்கள்
- காயம் ஏற்பட்டு ஆறிக்கொண்டிருக்கும் புண்கள், புதிதாக ஏற்பட்ட ரத்த காயங்களில் அடிக்கடி நீர் படுவதை தவிர்க்க வேண்டியிருக்கிறது.
- இதற்கு நிவாரணமாக அக்காயங்களில் தேங்காய் எண்ணெயை நன்கு தடவுவதன் மூலம் நீர் புகாமல் பாதுகாப்பு ஏற்படுவதோடு.
- அப்புண்கள் மற்றும் காயங்களை வேகமாக ஆற்றவும் உதவுகிறது.
தலைமுடி
- தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன.
- மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் தினந்தோறும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை தேய்த்து வருவதன் மூலம் தலை முடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக தீரும்
வாய், பற்கள் மற்றும் ஈறுகள்
- தினமும் காலையில் எழுந்த உடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக்கொண்டு ஒரு 20 நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து பிறகு, அந்த எண்ணையை துப்பி விட வேண்டும்.
- இதற்கு ஆங்கிலத்தில் ஆயில் புல்லிங் என்று கூறுவார்கள். இதை தினந்தோறும் செய்து வருபவர்களுக்கு பற்களில் சொத்தை ஏற்படுதல், ஈறுகள் வலுவிழப்பது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.
உடல் குளிர்ச்சி
- தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டதாகும்.
- தேங்காய் எண்ணையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கி உடல் சீக்கிரத்தில் குளிர்ச்சி அடையும்.
- தேங்காய் எண்ணையை உடல் மற்றும் தலைக்கு நன்கு தேய்த்த பின்பு குளிப்பதால் உடலில் இருக்கின்ற உஷ்ண நோய்கள் நீங்கும். கண்களும் குளிர்ச்சி பெறும்.