கோயில் உண்டியல் திருடிய 5 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கிராமங்களில் உள்ள கோயில்களில் உண்டியல்கள் சில நாட்களாக தொடர்ந்து திருட்டு ஏற்பட்டது. இது தொடர்பாக உச்சிப்புளி காவல் நிலையத்தில் மக்கள் புகார் செய்து நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் உச்சிப்புளி போலீஸார் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட உச்சிப்புளி அருகே பணவாய்க்கூட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், கல்கிணற்றுவலசையைச் சேர்ந்த முனீஸ்வரன், சிவகங்கை மாவட்டம் உச்சிப்புளிபட்டியைச் சேர்ந்தவரும் தற்போது உச்சிப்புளி அருகே நாரையூரணியில் வசித்துவரும் தர்மராஜ், உச்சிப்புளி வாணியங்குளத்தைச் சேர்ந்த முனியசாமி,உசிலங்காட்டு வலசையைச் சேர்ந்த கோபிநாத், ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.14,000 உண்டியல்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.