பரமக்குடி அருகே பெண்ணை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே நகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் போக்கார்.
அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் இவர்களுக்குள் ஏற்கனவே இடப் பிரச்சினை இருந்து.
அதை மனதில் வைத்துக் கொண்டு போக்கார் நகரமங்கலம் கிராமத்தில் உள்ள வீட்டில் இல்லாத நேரத்தில் போக்கார் மனைவி பஞ்சவர்ணம் மட்டும் இருந்தபோது உலகநாதன், மேகலா, சித்திரைவேலு, பாப்பா, பஞ்சவர்ணம், தீபா ஆகியோர் ஒன்று சேர்ந்து அசிங்கமாக பேசி பஞ்சவர்ணம் முடியை பிடித்து இழுத்து கையால் அடித்து காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
போக்கார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 19ஆம் தேதி நைனார் கோவில் போலீசார் 6 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் “இலவச கேஸ் இணைப்பு” சிறப்பு முகாம்