இராமநாதபுரம் முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் 77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
செயல்அலுவலர் மாலதி துணைத்தலைவர் வைணவ பெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் ஆணையாளர் ஜானகி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன்யோர் முன்னிலையில் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகப்பிரியா ராஜேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கடலாடி ஊராட்சியில்
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் முத்துலெட்சுமி முனியசாமிபாண்டியன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் ஆத்தி மேலாளர் முனியசாமி ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஜெயசந்திரன்- உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாயல்குடி பேரூராட்சியில்
சாயல்குடி பேரூராட்சியில் 77வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியை பேரூராட்சி சேர்மன் மாரியப்பன் தலைமையில் – செயல் அலுவலர் சேகர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. துணைத்தலைவர் மணி மேகலை – இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.