பரமக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினம்
பரமக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நகர் மன்ற தலைவர்கள் தலைமையில்
அதேபோல் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு தினத்தை முன்னிட்டு காட்டு பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருஉருவ வெண்கல சிலைக்கு சபைத்தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். சபையின் செயலாளர் மகேஸ்வரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முன்னிலை வகித்தனர்
மற்றும் இருளப்பன், ராதாகிருஷ்ணன், சவரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சதீஷ், செல்வகுமார், கோவிந்தராஜா, வின்சென்ட் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், கண்ணன், பன்னீர்செல்வம், வரதராஜன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வ.உ.சி மெட்ரிக் பள்ளியில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு பள்ளியின் தாளாளர் முனியாண்டி பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சபையின் பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.