பரமக்குடி டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் 9வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பரமக்குடி டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவிற்கு வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைவர் முகைதின் முசாபர் அலி அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், ராமநாதபுரம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் டார்ச்சை கையில் ஏந்தி வந்தனர். பின்பு சிறப்பு விருந்தினர்களும் பள்ளியின் தலைவரும் சேர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றினர். புறாவை வானில் பறக்க விட்டு விளையாட்டு விழா தொடங்கப்பட்டது. மாணவர்கள் யோகா, கராத்தே, பிரமிட், வில் வித்தை மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தங்கள் திறமையை காண்பித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களின் திறமையை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் விளையாட்டு விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


