பரமக்குடி அருகே உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தில் ஆதிசக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தில் தசரா பெருந்திருவிழா சூரசம்ஹாரம் நடைபெற்றது. முதல் நாள் கொடி ஏற்றத்துடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. இரண்டாம் நாள் ராஜேஸ்வரி கொலு மண்டபத்தில் வீற்றிருத்தல், மூன்றாவது நாள் சிவசக்தி ரூபத்தில் காட்சியளித்தார். நான்காவது நாள் காளி ரூபத்திலும், ஐந்தாவது நாள் மகாலட்சுமியாகவும், ஆறாவது நாள் தன தானிய லட்சுமி ஆகவும், ஏழாவது நாள் அஷ்ட லட்சுமி ஆகவும், எட்டாவது நாள் சரஸ்வதி தேவியாகவும், ஒன்பதாவது நாள் ராஜமாதங்கி ரூபத்தில், பத்தாவது நாள் சரஸ்வதியாக எழுந்தருளி அதனைத் தொடர்ந்து சப்த கன்னிகளுடன் அம்பாள் ஆதிசக்தி ராஜேஸ்வரி திருவீதி உலா முளைப்பாரி ஊர்வலம் வருதல் நடைபெற்றது. 11 வது நாளாக விஜயதசமி அன்று சப்த கன்னிகள் சூழ அட்டகாளிகள் உடன் விஸ்வரூபம் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் ராஜேஸ்வரி அம்பாள் வைகை ஆற்றுப் படுகையில் எழுந்திருளி மகிஷா சூரனை வாதம் செய்து பின் அம்பாள் ஆதிசக்தி ராஜராஜேஸ்வரிக்கு மங்கையர் கூடி வெற்றி ஆராத்தி எடுத்து அம்மனை சாந்த சொரூபமாக அம்பாளை சக்தி பீடத்திற்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சக்தி பீட நிறுவனர் விஜேந்திர சுவாமிகள் தீட்சதர் மற்றும் ட்ரெஸ்டிகள் விழா கமிட்டினர் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.


