Thursday, January 15, 2026
Google search engine
Homeசெய்திகள்முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை அரசு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கருணாஸ் தனது ஆதரவாளர்களுடன் மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்துராமலிங்கம், மாநில துணை பொதுச் செயலாளர் பெருமாள், இளைஞர் அணி இணைச் செயலாளர் சௌந்தர், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சிவசங்கரமேத்தா, மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் (மேற்கு), ராமு, சிவகாசி முருகன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments