பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு
என் வளையனேந்தல் கிராமத்தில் நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா என்று பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே என்.வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி, இவரின் கணவரும் அதை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரும் அண்ணன் தம்பி ஆவார்கள். ராமலட்சுமி என்.வளையனேந்தல் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது நாகராஜ் வந்து தேவையில்லாமல் ராமலட்சுமியை நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா என்று கேட்டு ,அசிங்கமாக பேசி ராமலட்சுமி தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.