ராமநாதபுரத்தில் சாலை மறியல் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரம் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனி சாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அதி முகவினர் 117 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். சென்னையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி, ராமநாதபுரத்தில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில், பேருந்து நிலையம் அருகே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். போலீஸார் இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி, எம். சாமிநாதன், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.ஜி. மருதுபாண்டியன், அசோக்குமார், நகர் கழகச் செயலாளர் பால்பாண்டியன் உள்ளிட்ட 117 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.