மொய் பணம் கேட்டவர் மீது வழக்கு பதிவு
வைரவனேந்தல் கிராமத்தில் பெண்ணிடம் மொய் பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு
சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னம் இவர் தனது உறவினர்கள் இறந்த கேதம் கேட்க வைரவனேந்தல் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அன்னத்தின் இரண்டாவது மகளும் வைரவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த புதுராஜா என்பவரின் மைத்துனரும் காதலித்து பின்னர் பிரிந்து விட்ட நிலையில் புதுராஜா தனது மைத்துனருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் விட்டதாகவும் திருமண பத்திரிக்கை கொடுக்க அன்னத்தின் அண்ணன் வீட்டிற்கு வந்தபோது அங்கு இருந்த அன்னத்தை பார்த்து தான் செய்த மொய் பணத்தைக் கேட்டு பிரச்சினை செய்து அசிங்கமான வார்த்தைகளால் பேசி கையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர் .அன்னம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று சத்திரக்குடி போலீசார் வழக்கு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.