ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள செம்படையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சந்திரா . இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நம்பீஸ்வரனுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.கார் ஓட்டுநரான நம்பீஸ்வரன், மைக்செட் தொழிலும் செய்து வந்தார். தொழிலை விரிவுபடுத்த, மனைவியிடம் இருந்த தங்க நகைகளை வாங்கி அடகு வைத்தார். இந்த நகையைத் திருப்பித் தராத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான சந்திரா சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உச்சிப்புளியில் இளம்பெண் தூக்கிட்டுத்தற்கொலை போலீஸார் வழக்குப் பதிவு
RELATED ARTICLES