பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி கடந்த 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடந்தது.
இதில் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள், சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்த புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதை பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்தார். அ.தி.மு.க. எம்.பி. தர்மர் கண்காட்சியை பார்வையிட்டு பெண்கள் மீதான பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.
அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறு தானியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டார். பின்பு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் முன்னாள் திருநெல்வேலி கள விளம்பர அலுவலர் கோபகுமார், அஞ்சல் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் மோகன பிரியா, தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், தமிழாசிரியர் நாகு, கள விளம்பர அலுவலர் தேவி பத்மா உள்பட கலந்து கொண்டனர். மதுரை உதவி அலுவலர் போஸ் வெல் ஆசிர் நன்றி கூறினார்.
