Saturday, December 9, 2023
Homeஉடல்நலம் அறிவோம்காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய பழக்கம்

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய பழக்கம்

  • காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசுமாடு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.
  • தினசரி விளக்கேற்றுவது குடும்பத்தில் செல்வம் பெருகும்.
  • செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்ற வேண்டும்.
  • பணம் கொடுக்கும் போது வாசல் படியில் நின்று பணம் கொடுக்கக் கூடாது.
  • சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரை பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
  • ஆட்டுக்கல், அம்மி, வாசற்படி, உரல், இவைகளில் உட்கார கூடாது.
  • இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
  • வெற்றிலை, வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்க கூடாது.
  • எரியும் குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது. ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
  • வீட்டில் யாரையும் சனியனே, எழவு என்று திட்டக்கூடாது.
  • கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. துணி மணிகளை உடுத்தி கொண்டே தைக்கக் கூடாது.
  • உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக் கூடாது.
  • செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
  • எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
  • எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
  • சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
  • தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments