கமுதி அருகே தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்
வைகைஅணையில்தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, கமுதி அருகே தரைப் பாலம் வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், 5 கிராம மக்கள் கயிறு கட்டி ஆற்றைக் கடக்கின்றனர். வைகை அணையிலிருந்து ஆற்றில் 7 ஆயிரம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகிலிருந்து 4,500 கன அடி வீதம்.ராமநாதபுரம் பெரியகண்மாய், . கமுதி பகுதியில் உள்ள பரளையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது
இதனால்,கமுதி செய்யாமங்கலம் அருகே செல்லும் கிராமத்துக்கு அமைந்துள்ள தரைப்பாலம் வழியில் வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது.செய்யாமங்கலம், தாதனேந்தல்,பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் ஆகிய 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து, ஆற்றைக் கடக்க தரைப்பாலத்தின் இருபுறங்களிலும் கயிறு கட்டப்பட்டது வேலைக்குச் செல்வோர், பள்ளி,கல்லூரி மாணவர்கள் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.