உங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகமாக ஏற்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக கரோனா போன்ற நுண்கிருமி தொற்று பரவலுக்குப் பின் பலர் முக்கியத்துவம் உணவிற்கு அளித்து வருகின்றனர். அந்த வகையில், ரசாயன கலப்பு இல்லாத, தாவரங்களிலிருந்து இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்களை தேடித் தேடிவாங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கொய்யா, நாவல், முருங்கை என பல வகையான செடிகள், மரங்களின் பூ, காய், இலை ஆகியவற்றைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் சூப் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. குடிசைத் தொழிலாக நடைபெறும் இந்த வகை உணவுப் பொருள்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
கபம் முதல் சர்க்கரை நோய் வரை மூலிகை சூப் மூலம் தீர்வு:
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள இ. சித்தூர் மூங்குபெத்தன்பட்டி கிராமத்தில் முருங்கை, கொய்யா. நாவல் போன்ற பல்வேறு வகையான இலை, விதைகளை பயன்படுத்தி சூப் தயாரிக்கும் குடிசைத் தொழில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக குடிசைத் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ். சௌடீஸ்வரி கூறியதாவது: முருங்கை இலை, முருங்கைக்காய், கொள்ளு, ஆவாரம்பூ, முடக்கத்தான் இலை, மனத்தக்காளி,இலை, கொய்யா இலை, தூதுவளை இலை, நாவல் விதை, கொல்லி மலை பகுதியிலிருந்து கிடைக்கும் முடவாட்டுக்கால் இலை, போன்றவற்றைப்பயன்படுத்தி சூப் தயாரிக்கிறோம்.
இந்த பொடிகளை, வெந்நீரில் சுலந்து எளிதாக சூப் தயாரிக்க முடியும். முருங்கை இலை சூப் மூலம், ரத்த சோகை, தலை முடி, கண் தொடர்புடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கபம், உடல் எடை குறைவு போன்றவற்றுக்கு கொள்ளு சூப் அருமருந்தாக உள்ளது. வாத நோய்களுக்கும், கால் கை வலிக்கும் முடவாட்டுக்கால் சூப் சிறந்த மருந்து,கரை நோய்க்கும், மனத்தக்காளி குடல் புண்ணுக்கும். கொய்யாஇலை பல தரப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகின்றன. இதை உணர்ந்து, இலை, விதைகளை வெயில், நிழலில் உலர்த்தி, அதிலுள்ள மருத்துவக் குணங்கள் அப்படியே கிடைக்கும் வகையில் சூப் பொடி தயாரிக்கிறோம். உடலுக்கு ஆரோக்கியமாகவும், பல நோய்களுக்கு தீர்வாகவும் இருப்பதால் சூப் வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.நாட்டுச்சர்க்கரை கலந்த இந்த இனிப் வகைகள். குழந்தைகள் முதல் . ஆரோக்கிய தின்பண்டகளாகும்.இதே போல, இதே சிறுதானிகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிலும் ஈடுபட்டு வருகிறனர் சூப் ,தின்பண்டகள் ஆகியவற்றை தரதாகவும், சுவையாகவும், ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.இந்த குடிசைத் தொழில்.