தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து முன்னேற்றம் அடைய மானியத்துடன் கூடிய வங்கி கடனும் மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடனும் ஆவின் பாலகம் அமைத்திட நிதி உதவியும் இலவச தையல் இயந்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது, வருவாய் கிராமத்திற்கு ஒரு தனியார் இ-சேவை மையம் அமைக்க அரசு உத்திரவிட்டதை தொடர்ந்து, கிராம தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in இணையதளங்களில் வரும் 28.06.2023 விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இ-சேவை அமைக்க விருப்பமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பெறுவதற்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு (விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம் (தொலைபேசி எண்: 04567-231410) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.