Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ராமநாதபுரத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு நலத்திட்டம்

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமையேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினருக்கு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தனி துறையாக ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்துறையின் மூலம் மாவட்டம் தோறும் ஒரு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், ஒரு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினரின் வேண்டுகோளை ஏற்று கூடுதலாக மகளிர் உதவும் சங்கம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு மாவட்டம் தோறும் கூடுதலாக மகளிர் உதவும் சங்கம் செயல்பட உள்ளது.

இதன் நோக்கம் மகளிர் உதவும் சங்கத்தில் பொதுமக்களில் பங்களிப்பு நிதியாக ஒரு பங்கு வழங்கினால் அதற்கு இணையாக 2 பங்கு அரசு நிதி வழங்கி அதற்கான பணிகள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் இருப்பவர்கள் கொடுக்கும் நிதி இல்லாதவர்களின் தேவையை நிறைவேற்றும் சங்கமாக இது செயல்பட்டு வரக்கூடிய திட்டமாகும்.

தனி அலுவலகம்

மேலும் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்காக தனி அலுவலகம் செயல்படுத்த கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதலமைச்சர் உத்தரவால் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக இந்த ஆண்டு 5 மாவட்டங்களில் துவங்க உள்ள நிலையில் அதில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலாவதாக துவங்கப்படும். அதேபோல் மண்டபம் அகதிகள் முகாமிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு ரூ.317 கோடி மதிப்பீட்டில் 3500 வீடுகள் கட்டும்பணி 19 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்பொழுது ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளன.

உதவித்தொகை

உலமாக்களுக்கு நல வாரியம் செயல்படுத்தப்பட்டு வருவது போல் கிறிஸ்துவ மக்களுக்கும் தனி வாரியம் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் பெற்று நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தையல் இயந்திரம், சலவை பெட்டி வழங்கியதுடன் மிதிவண்டியும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. உலமாக்கள் உறுப்பினர்களுக்கு இரு சக்கர வண்டிகள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

உலமாக்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறும் நபர் இறந்தால் அவர்களின் வாரிசுக்கு அந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

6 கோடி நிதி ஒதுக்கீடு

பழமை வாய்ந்த பள்ளிவாசல் மற்றும் தேவலாயங்கள் சீரமைத்திட ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணிகள் மேற்கொள்ள பள்ளிவாசல் மற்றும் தேவலாயங்கள் கணக்கெடுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பள்ளிவாசல், தேவலாயங்களை சீரமைக்க 2 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நாகூர், ஏர்வாடி, மூத்துப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் ஆலயங்கள் கண்டறியப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ள உள்ளன. இதே போல் மற்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டு வருகின்றன.

கல்வி உதவித் தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு டாம்கோ திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் சிறுபான்மையின பெண்கள் முழுமையாக கல்வி பெறவேண்டும் என்பதே ஆகும்.

குறிப்பாக கடல் கடந்தாவது கல்வியை பெற வேண்டுமென நபிகள் நாயகன் கூறினார்கள். அதை நினைவாக்குவது மட்டுமின்றி சிறுபான்மையின அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் முதலமைச்சர் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக கடந்த ஆண்டுகளில் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வந்ததை நடப்பாண்டு நிறுத்தி விட்டது.

மாணவ, மாணவியர்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டு, பல்வேறு போட்டி தேர்வுக்கான திறன் பயிற்சிகளும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக பெரும்பான்மை ஆள வேண்டும் சிறுபான்மை வாழ வேண்டும்.

என்ற கூற்றை நினைவுபடுத்தும் விதமாக பன்முக நோக்கோடு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை அமைதியான மாநிலமாக மாற்றி ஆளுமை திறன் கொண்ட முதல்வராக முதலமைச்சர் இருந்து வருகிறார்கள்.

இங்கு பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் திட்டங்களை பெற்று தர பக்கபலமாக இருப்பேன் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments