ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்புகளால் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தை குறியீடுகள் நடுநிலையான குறிப்பில் வர்த்தகத்தைத் தொடங்கின. ஆனால் எச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் மற்றும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகளில் முதலீடுகள் அதிகரித்ததால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
நிப்டி 50 குறியீட்டில், உலோகத்துறை பங்குகள் தவிர்த்து, அனைத்து துறை பங்குகளும் உயர்வுடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக, ஆறு நாட்கள் வீழ்ச்சி கண்ட குறியீடுகள்.அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பை தொடர வாய்ப்புள்ளதால், அடுத்தடுத்து பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று, ——5,730 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.84 சதவீதம் சரிந்து, 79.44 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 83.97 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்