மருத்துவத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுமருத்துவமனையில்
இக்கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் விபத்துகளுக்கான சிகிச்சை வழங்கியது குறித்த விவரம் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ எப்கேன் மற்றும் USG போன்ற பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்து சிகிச்சைகளின் விவரங்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்ததுடன் மேலும் அரசு மருத்துவமனைகளில் முழு நேரமும் மேற்கொண்ட பரிசோதனை கூடங்கள் செயல்பட மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மருத்துவ காப்பீடு திட்டம்
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சைக்கு வருபவர்களிடம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெரிவிப்பதுடன் உயர் சிகிச்சைக்கு தேவையான நோயாளிகளுக்கு இத்திட்டத்தில் உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும். அதற்கேற்ப பொதுமக்களிடம் மருத்துவர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் அதேபோல் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தில் எத்தனை நபர் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றார்கள் என்று கண்காணிப்பதுடன் உயர்சிகிச்சை பெற வரக்கூடியவர்களுக்கு உறுதுணையாக இருந்து முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துச்சொல்லி அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளை பெற்று பயன்பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.மேலும் மருத்துவமனைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் தேவைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு ஏற்ப மருத்துவர்கள் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கான சிகிச்சை வழங்குவதில் சிறப்பு கவனம் எடுத்து செயல் பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.
அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன், இணை இயக்குநர் (மருத்துவம்) சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அஜித் பிரபு குமார் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரதாப் குமார், துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) சிவானந்தவள்ளி, ரவிச்சந்திரன், பூச்சியல் வல்லுநர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் திலீப் குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.