பரமக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்
பரமக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர்
ஆணையாளர் ஆய்வு
பரமக்குடியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பரமக்குடி நகராட்சி ஆணையாளர் திருமால்செல்வம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள்
இதில் மீன்கடை தெருவில் உள்ள குவாலிட்டி ஸ்டோர் கடையிலிருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
அபராதம்
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த குவாலிட்டி ஸ்டோர் உரிமையாளர் நூருல் அமீன் என்பவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.