இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டதின் பல மாணவர்கள் பங்கேற்றனர். “தூய்மை இந்தியா “என விழிப்புணர்வு சைக்கிள் பேரணியாக சென்றனர்
சிறப்புடன் நடைபெற்ற முகாம்
இப்பள்ளியில் கடந்த மாதம் முதல் நாட்டு நலப்பணித் திட்டம் என்ற சிறப்பு முகாம் தொடர்த்து வருகின்றது.7 நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தூய்மை இந்தியா திட்டத்தையேட்டி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இதனை வட்டாட்சியர் அப்துல் ஜப்பார் தொடங்கி வைத்தார். மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயா கிறிஸ்டல் ஜாய் தலைமை வகித்தார். சமூகஆர்வலர் சுடலை முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பழனிச்சாமி, தினகரன், அருணாச்சலராஜா, உடற்கல்வி இயக்குநர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டங்களில் நடைபெற்ற “தூய்மை இந்தியா திட்டம்”
மானாமதுரை சிவகங்கை மாவட்டம், இளையான்குடி “டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் “”தூய்மை இந்தியா திட்டம்” குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டர் .நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாணவ- மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்.
அதன் பிறகு இளையான்குடி இந்திரா நகர் பகுதியில் தூய்மை இந்தியா பிரசாரத்தை வலியுறுத்தினர்.மேலும் தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி ஒற்றுமை ஓட்டப்பந்த்தையம் நிகழ்வு நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படை மாணவர்களும் இணைந்து கலந்து கொண்டார்
கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி மற்றும் மாணவ- மாணவிகள் ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி காளிதாசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள். பீர்முஹம்மது,அப்ரோஸ், ஷேக்அப்துல்லா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்