Friday, September 22, 2023
Homeராமநாதபுரம்குருபூஜை விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

குருபூஜை விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

குருபூஜை விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்,அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை அவர்கள் முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்,அவர்கள் தெரிவிக்கையில் தேவர் நினைவிடம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க 28.10.2022 முதல் 30.10.2022 வரை போதிய எண்ணிக்கையிலான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சட்டம் மற்றும் ஒழுங்கினை கண்காணித்திட “நிர்வாக நடுவர்கள்” நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிர்வாக நடுவர்கள் சட்டம் மற்றும ஒழுங்கு ஏற்படும் சமயத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய காவல் துறை அலுவலர்கள் பெயர் மற்றும் தொலைப் பேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும்.

பொது மக்களின் நன்மைக்காக

பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்படும் அரசு பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்திலும் ஒரு காவலரை நியமனம் செய்ய வேண்டும். தனி நபர்கள் அமைக்கும் அன்னதானப் பந்தலின் உறுதித்தன்மையை சரிபார்க்க வேண்டும். நினைவிடத்தின் மேற்குப்புறம் முக்கியபிரமுகர்கள் வரும் வழியில் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக மரத்தாலான தடுப்புவேலி அமைக்கவேண்டும்.

கோட்டை மேடு வளைவு முதல் நினைவிடத்தில் உள்ள வளைவு வரை தற்காலிக மின்விளக்கு
வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். குருபூஜை விழாவிற்கு வரும் மக்கள் காலணிகள் அகற்றுவதற்கு ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும். நுழைவு பகுதிகளிலிந்து வெளிப்பகுதி வரை சாலை செப்பனிடும் பணி அனைத்தும் விரைவில் முடித்திருக்க வேண்டும்.

பசும்பொன் கிராமத்தில் மட்டும் 27 சின்டெக்ஸ், 30 நகரும் கழிப்பறைகள், 30 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும், 90 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். 29.10.2022 மற்றும் 30.10.2022 தேதிகளில் முறையே 200 மற்றும் 250 பேருந்துகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக இயக்கப்பட வேண்டும். சுமார் 19 இடங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இரண்டு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கை

மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், அவைகளை உடனே சரிசெய்ய போதுமான பணியாளர்களை அமர்த்தி உடனே பழுதுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் ஜெனரேட்டர், மற்றும் பாதுகாப்பு விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் பயன்படுத்தும் பொதுக்கழிப்பறைகள் அருகில் கண்டிப்பாக மின்சார விளக்குகள் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பசும்பொன் கிராமத்தில் அன்னதானம் வழங்கும் இடங்களில் வழங்கப்படும் அன்னதானத்தை பரிசோதித்து உரிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் 27.10.2022க்குள் முடித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ்,அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார்,அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்துல் தாப்ரசூல்,அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (பொது)சேக் மன்சூர் அவர்கள், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரகதநாதன் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன்,அருண் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments