Wednesday, October 4, 2023
Homeராமநாதபுரம்இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் நினைவு தினம்

இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் நினைவு தினம்

இராமநாதபுரம் மாவட்ட இராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவு தினம் இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேய்க் கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் அமைந்துள்ளது

இந்த மணிமண்டபத்தில் நினைவு தினம் நிகழ்ச்சி நேற்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியடுத்து அவர் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா மறைக்காயர்,மகன் ஜெயூலா தீன்,மருமகன் நிஜாமுதின் பேரன்கள் சேக்தாவூ, சேக் சலீம் ஆகியோர்கள் வருகை தந்தனர்.அங்கு ராமேஸ்வரம் ஜமாத் ஆயிஷா அப்துல் ரஹ்மான் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது அதன் பின்பு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கீதா ஜெயின் மற்றும் வேலூர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் இப்ராஹிம் மற்றும் சென்னை சில்க்ஸ் உரிமையாளர் விநாயகம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments