பரமக்குடி ஹரிஸ்வர்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஓட்டப் பந்தய போட்டியில் சாதனை
இராமநாதபுரம் மாவட்டம் அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி, 800 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி என இரண்டிலும பரமக்குடி ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். மாணவரின் சாதனையை பள்ளியின் பொருளாளர் கல்பனா தேவி, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன், நிர்வாக மேலாளர் சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டினார்.