நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 950 எக்டர் இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்துத் தரப்படும்.
துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைப்பதற்கும், டீசல் பம்பு செட்/மின்சார மோட்டார் பம்பு செட் அமைப்பதற்கும், அரசு மானியம் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.