இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த பார்வையிட்டார்.
பார்வையிட்ட குழுத்தலைவர்
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் அன்பழகன் அரிச்சல் முனை பகுதியை பார்வையிட்டு சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானவைகளின் ஒன்றாக இப்பகுதி விளங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இங்கு தேவையான அளவு கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் போதியளவு வழங்கிட சுற்றுலாத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன், மேலும் சாலைவசதிகள், மின்விளக்குகள் வசதி போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட
மேலும் இப்பகுதியில் உள்ள மீனவமக்களிடம் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் கேட்டறிந்தார்கள். அப்பொழுது அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இப்பகுதியில் கழிப்பறை கட்டடம் வசதி அமைத்துக் கொடுத்தல், மருத்துவ வசதிகள் வழங்கிடவும், இங்கு 250-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். மீன்பிடி தொழில் மட்டுமே நம்பி இருந்து வரும் நிலையில் சுயதொழில் மேற்கொள்வதற்கு அரசு உதவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள். தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் அவர்கள் அப்பகுதியில் சுற்றுலா வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு சுயதொழில் தொடங்க தேவையான அளவு கடனுதவிகள் வங்கியின் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்
இதன் செயல்பாட்டின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனை செல்வன் , சிவக்குமார், இராமச்சந்திரன், பரந்தாமன் , காந்திராஜன் , ஜவாஹிருல்லா , மணியன் , அருண்குமார் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் அன்பழகன் உடன் இருந்தனர்