அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்படப் பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்.7-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தில் நயன்தாராவின் தோற்றத்தைச் சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் தோற்றம் நேற்று வெளியானது. நடிகர் ஷாருக்கான் அதை வெளியிட்டார். அவருக்கான கேப்ஷனாக ‘டீலர் ஆஃப் டெத்’ (மரண வியாபாரி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் இந்தத் தோற்றம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.