பரமக்குடியில் அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தொடங்கிய முதல் நிகழ்வாக சொத்து வரி உயர்வுக்கான சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை கண்டித்து அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகர்மன்ற உறுப்பினர் வடமலையான், “தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் 100 முதல் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.
இதே போன்று 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆனால் அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த கீர்த்திகா முனியசாமி பரமக்குடி நகராட்சியில் மட்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சொத்து வரியை உயர்த்தவில்லை. ஆனால் இன்று வந்த தி.மு.க அரசு மக்களின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாமல் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.
இதனை கண்டித்து அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.”
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் விரைவில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம்