ராமேஸ்வரத்தில் பல வருடங்களுக்கு கழித்து தங்க தேரோட்டம் நடைபெற்றது
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.
அமைச்சர் தொடக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.இதன் பின்னர், கோயிலில் இருந்த தங்கத்தேர் கடந்த 12 ஆண்டுகளாகப் பயன்பாடமல் இருந்தது. தங்க தேரோட்டத்தை சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதனை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.
முக்கிய தலைவர்கள் பங்கேற்று கலந்து கொண்டனர்
இதில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம், துணை ஆணையர் மாரியப்பன், நகர்மன்றத் தலைவர் நாசர்கான், துணைத் தலைவர் தெட்சிணமூர்த்தி, உதவி கோட்டபொறியாளர் மயில்வாகணன், ராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் நாகேந்திரசேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.