ஆண்கள், பெண்கள் என இருவரும் இந்தியாவில் அனைத்து கடவுள்களையும் வழிபட்டு வருகின்றனர். மேலும் கடவுள்களை பல வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.
ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் வாயு புத்திரன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலகோடி மக்களால் வணங்கப்படுகிறார்.
மந்திரம் சொல்லக்கூடாது
சில மரபுகளின் படி ஆஞ்சநேயரை வழிபடுவது, அவருடைய மந்திரத்தை கூறுவது போன்றவற்றை பெண்கள் செய்யக் கூடாது. குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் செய்ய கூடாது. ஆனால் உலகம் முழுவதும் பல பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
தனியாக வாழ
புராணங்களின் படி ஆஞ்சநேயர் தீவிர பிரம்மச்சாரியாயத்தை கடைபிடிப்பவர் ஆவார். திருணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் தனியாக வாழ வேண்டுமென்று விரும்புபவர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.
ஆனால் காலப்போக்கில் இந்த முறை மாறி அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடும் முறை கொண்டுவரப்பட்டது.
தொடமால் இருப்பது நல்லது
பெண்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலும் அங்கு அனுமனின் உருவச்சிலையை தொடமால் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
இதற்கு காரணம் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் அனுமன் பெண்கள் தன்னை தீண்டுவதை விரும்பமாட்டார்.
கடவுள் சமம்
பாலினம் முக்கியமல்ல கடவுள் வழிபாட்டை பொறுத்த வரையில் வழிபாட்டிற்கோ அல்லது மந்திரங்களை கூறி வழிபடுவதற்கோ பாலினம் முக்கியமல்ல.
ஆண், பெண் இருவருமே அனைத்து கடவுள்களையும் வழிபடலாம். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.