சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை வளர்ச்சி பணிகள். இணை இயக்குனர் ஆய்வு.
சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை வளர்ச்சி திட்ட பணிகளை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளுக்கு நிதி உதவி
பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கௌரவ நிதியுதவி திட்டத்தில் 13 வது தவணை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க E.K.Y.C. செய்வது கட்டாயமாகும். சத்திரக்குடி வட்டாரத்தில் (பி.எம் கிஷான்) திட்டத்தில் E.K.Y.C. செய்யும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி, ஆய்வு செய்தார்.
திட்டங்கள் பற்றி பட்டியலிடப்பட்டனர்
மேலும், கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட எட்டிவயல் கிராம பஞ்சாயத்தில், 22.62 ஏக்கரில் தரிசு நில தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதையும்.
அங்கு 14 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குதிரைவாலி,பயறு, நெல் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களை ஆய்வு செய்தார்.தரிசு நில தொகுப்பில் நல்லமணி, பரசுராமன், ஆகியோரின் வயல் வயலில் பருத்தி சாகுபடி மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் புகழ்காந்தி வயலில் குதிரைவாலி சாகுபடி செய்ததை ஆய்வு செய்தார்.
திட்டத்திற்கான உதவியாளர்கள்
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சார்பாக பயறு திட்டத்தில் அரியகுடி சரவணக்குமாருக்கு,மின்கலத் தெளிப்பானை 50 சதம் மானியத்தில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் இராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெயசங்கர்,பரிமளா, கண்ணன் மற்றும் திட்டத்தின் உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரகுரு, ஆகியோர் உடனிருந்தனர்.