பரமக்குடியில் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பரமக்குடி காந்தி சிலை முன்பு மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து காந்தி சிலை முன்பு ஏராளமான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நகரச் செயலாளர் ஜமால் தலைமை தாங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன்பிரபாகர், டாக்டர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் அவைத்தலைவர் சிகாமணி அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
செயலாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான்அலி, அண்ணா தொழிற்சங்கம் பிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் குப்புச்சாமி, முத்தையா, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெய்சங்கர், கண்ணன், முத்துக்குமார், குணாதேவி, தவமணி, முன்னாள் நகர் செயலாளர் வரதன், நகர் அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், பாசறை நிர்வாகி திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான் நன்றி கூறினார்.