தமிழக மக்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கும் அஜினமோட்டோவை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
வரப்பிரசாதம்
கடல் பாசியால் உருவாக்கப்பட்டது தான் அஜினமோட்டோ. உணவின் சுவையைக் கூட்டுவதற்காகவே கார்ப்பு என்ற ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அஜினமோட்டோவைக் கண்டுபிடித்தது. மிகவும் குறைவான விலையில், அற்புதமான சுவையை கொடுத்ததால் பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அஜினமோட்டோ மாறியது. அனைத்து விதமான ரெடிமேட் உணவுகளிலும் நல்ல விலைவை அஜினமோட்டோ ஏற்படுத்தி இருந்தது.
நோய்கள்
அஜினமோட்டோவை சேர்த்து கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் தலைவலி, வாந்தி, மயக்கம், நரம்பு, இதயம் பாதிக்கப்படுகின்றன. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மரத்துப் போதல், கூச்சம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகள் வருவதற்கு அஜினமோட்டோ காரணமாக உள்ளது.
மலட்டுத் தன்மை
அஜினமோட்டோ சேர்த்துக் கொண்ட உணவுகளை பெண்கள் உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதுவும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாக அஜினமோட்டோ உள்ளது.
மேலும், MSG கலந்துள்ள அனைத்து உணவுகளிலுமே, அவை குழந்தை களுக்கு ஏற்றவை அல்ல என்று போடப் பட்டிருக்கும். இந்த எச்சரிக்கை வாசகத்தை எந்தவித காரணங்களுக் காகவும் போடாமல் தவிர்க்கக் கூடாது.
விளைவுகள்
அஜினமோட்டோவினால் உயர் இரத்த அழுத்தம், அடி வயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டை-2 நீரிழிவு நோய், உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மன இறுக்கம், சாப்பாடு அலர்ஜியாதல் மற்றும் கண்களின் விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
மூடுவிழா
அஜினமோட்டோவின் விளைவுகளைப் பற்றி உலகெங்கிலும் பேசியுள்ளார்கள். எனினும், இது குறித்து தெளிவான கருத்துக்கள் வெளிவர மறுக்கின்றன.
இந்த விளைவுகள் உறுதியானவை என்று சொல்லப்பட்டால், எண்ணற்ற ரெஸ்டாரெண்ட்களையும், உணவகங் களையும் மூட வேண்டியது தான்.
குறிப்பு
குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்களில் அஜினமோட்டோவை தாராளமாக பயன்படுத்தி வருகிறார்கள். அஜினமோட்டோவை பற்றிய கருத்துக்கள் இன்றளவிலும் தெளிவாக இல்லாவிட்டாலும், அவற்றை யாராலும் மறுக்க முடியாது. இந்த எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்துமே ஆதாரமற்றவை என்றும் சொல்ல முடியாது.
மேலும் படியுங்கள் : டூத் பேஸ்ட் பயன்கள் பற்றி அறிவோம்