அஜித் AK 62 வில் விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணி:
அடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், தனது 62வது படத்திற்காக விக்னேஷ் சிவன் உடன் அஜித் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ தகவல் கடந்த மார்ச் மாதமே வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கியது.இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது. இதில் அனிரூத் இசையமைக்கவுள்ளார். இதையடுத்து அஜித் 62 குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அஜித், ஏ.கே.62 படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ. 105 கோடி பேசப்பட்டுளளதாக தெரிகிறது. மேலும், அஜித் இதில் அரசியல் தொடர்பான காட்சிகள் இடம் பெற கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
கதை பற்றி விக்னேஷ் சிவன்:
முன்னதாக, விக்னேஷ் சிவன் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர்கள் அஜித் படம் பற்றியும் கேட்டனர் அப்போது, AK 62 பட கதையை விக்னேஷ் சிவன் உறுதி செய்துள்ளார். மேலும், ”இந்த கதைக்காக கடந்த மூன்று வருடங்காக உழைத்து வருவதாகவும், நிச்சயமாக இது அனைவருக்கும் பிடிக்கும்” என கூறியுள்ளார். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் குஷி மோடில் துள்ளி குதித்தனர்.