நவீன வாசக்டமி சிகிச்சைக்கான விழிப்புணர்வு வாகனம்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நவீன வாசக்டமி சிகிச்சைக்கான விழிப்புணர்வு குறித்த வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
உலக வாசக்டமி தினத்தையொட்டி (21.11.2022) முதல் (04.12.2022) வரை இருவார காலத்திற்கு உலக வாசக்டமி விழா நடைபெறுகிறது. இவ்விழாவினையொட்டி வாசக்டமி ரதம் (NSV ரதம்) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
இதன் நோக்கம் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை வழங்குவது ஆகும். பொதுவாக பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை அதிகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன, இருந்த போதிலும் சில நேரங்களில் இருதய நோய், சக்கரை நோய், இரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய இயலாத நிலை இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு சிகிச்சை வழங்கும் பொழுது குடும்ப நலன் பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமுடன் இருந்திட இந்த சிகிச்சை என்பது பயனுள்ளதாக இருக்கும்.முக்கிய அலுவலகம் நபர்கள் கலந்து கொண்டனர்
இதன் பயன்கள் குறித்து பொது மக்களிடையே தெரிந்து பயன்பெறும் வகையில் இந்த வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் பயன் கருதி வாசக்டமி ஆண்களுக்கான பயனளிக்கும் பாதுகாப்பான கருத்தடை சிகிச்சை பெற்று பயன் பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், இணை இயக்குநர் (மருத்துவம்) சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) சிவானந்தவள்ளி, (சுகாதாரப்பணிகள்) அஜித் பிரபு குமார், ரவிச்சந்திரன், பூச்சியல் வல்லுநர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்