கமுதி சலையின் நடுவில் மின்கம்பம் பொதுமக்களுக்கு இடையூரு
கமுதி அருகே சாலையின் நடுவில் மின் கம்பம் நடப்பட்டதால் பொதுமக்கள், வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமமத்திற்கு உள்ளாகின்றன.
சாலையின் நடுவில்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாலையின் நடுவில் அமைத்துள்ள மின் கம்பங்களால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நீராவி காலனியில் என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அங்குள்ள தெருக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை போடப்பட்டிருந்தது. அப்போது சாலையில் இருந்த மூன்று மின் கம்பங்களை மாற்றி அமைக்காமல் அப்படியே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விவசாய பொருட்கள், கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அந்த தெருக்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
சாலை நடவடிக்கை
அப்பகுதியில் தற்போது மழைக்காலம் என்பதால் வீட்டு வாசலில் தேங்கும் மழைநீரில், மின்சாரம் கசிவு ஏற்படுகிறது.அதனால் தெருக்களில் விளையாடும் குழந்தைகள், முதியோர் பாதிக்கும் படும் அபாயம் உள்ளது என மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கமுதி மின்வாரிய அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.