Tuesday, June 6, 2023
Homeராமநாதபுரம்கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டக ஊராட்சி தலைவர் மோகன் தலைமையில் கால்நடைகளின் சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

கால்நடை வளர்ப்பவர்களுக்கு விளக்கம்

தேர்போகி, மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் குமார் தலைமையில் நடைபெற்றது. முகாமில் ராமநாதபுரம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு அதன் வளர்ப்பு குறித்து விளக்கமளித்து பேசினார்.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் நிஜாமுதீன், டாப்னி ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

கால்நடைகளை மருத்துவர் பரிசோதனை

முகாமில் தேர்போகி ஊராட்சிக்கு உட்பட்ட 115-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் 175 மாடுகளுக்கும், 473 வெள்ளாடுகள், 1535 செம்மறி ஆடுகள், 375 கோழிகள், 12 வளர்ப்பு நாய்கள் உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கால்நடை ஆய்வாளர் பூங்கோதை, பராமரிப்பு உதவியாளர்கள் திருவாசகம், கண்ணகி உள்பட கால்நடை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். தேர்போகி ஊராட்சி தலைவர் மோகன் குமார், ஊராட்சி செயலர் வினோத் உள்பட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை கால்நடை மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments