இராமநாதபுரம் மாவட்ட இராமேசுவரத்தில், பா .ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இராமேசுவரத்தில் நடைபயணம் தொடங்குகிறார். இதை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
அண்ணாமலை நடைபயணம் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா. ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, இராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.
மத்திய உள்துறை மந்திரி தமிழ் நாட்டிற்கு வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அமித்ஷா டெல்லியில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 3 மணி அளவில் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் விழா நடைபெறும்.இடத்திற்கு வந்து கலந்து கொள்கிறார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், பா. ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.விழாவுக்கு பின்னர் தனியார் ஓட்டலில் அமித்ஷா ஓய்வெடுக்கிறார். பின்னர் ராமேசுவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இரவில் ராமேசுவரத்தில் தங்குகிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை
இதற்கிடையே நடைபயணம் தொடங்கியதும் இராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து அண்ணாமலை குறைகளை கேட்கிறார். அண்ணாமலையும் இரவில் ராமேசுவரத்தில் தங்குகிறார். 29-ஆம் தேதி காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை சந்திக்கிறார். தொடர்ந்து இராமநாதபுரம் நகரில் நடைபயணமாக பொதுமக்களை சந்திக்கிறார். அன்று இரவு இராமநாதபுரத்திலேயே தங்குக்கின்றார்
வருகிற 30- ஆம் தேதி அன்று காலை முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், பிற்பகலில் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கும் செல்கிறார். அன்று இரவு பரமக்குடியில் தங்குகிறார்.
திருவாடானை 31-ஆம் தேதி அன்று காலை பரமக்குடியில் இருந்து புறப்பட்டு திருவாடானை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டபடி சிவகங்கை மாவட்டத்துக்கு செல்கிறார்.
நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. இராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இரு புறமும் பா. ஜ.க. கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா மேடையானது நாடாளுமன்றத்தை போன்று அமைக்கப்பட்டு வருகிறது.