சீருடை பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் குறைந்த அளவு தேர்வு எழுதினர்
3,552 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இரண்டாம் நிலை காவலர் தேர்வு
தமிழகத்தில் 295 மையங்களில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பு வீரர் என 3,552 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 295 மையங்களில் நடைபெற்றது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் போது பேசவோ, சைகை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
66,000 கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 3,552 காலிப்பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,99,500 கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர், 67,000 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.