Tuesday, December 5, 2023
Homeசெய்திகள்ராமநாதபுரத்தில் திருக்குறள் ஒப்பிதல் போட்டிக்கு  விண்ணப்பம்

ராமநாதபுரத்தில் திருக்குறள் ஒப்பிதல் போட்டிக்கு  விண்ணப்பம்

ராமநாதபுரத்தில் திருக்குறள் ஒப்பிதல் போட்டிக்கு  விண்ணப்பம்

தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

2022 -2023 ஆம் ஆண்டிற்கு இராமநாதபுரம் மாவட்ட பள்ளி / கல்லூரி மாணவ/மாணவியர்களிடமிருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான குறள் எண் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்கவேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவுசெய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்படுவர்.

  • 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்தொகை ரூ.10,000/- மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் இப்போட்டியில் பங்கேற்கக் கூடாது.
  • போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ/மாணவியர் இராமநாதபுரம் மாவட்டக் கருவூல அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தினை நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் http://https//tamilvalarchithrurai.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு http://04567-232130 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
  • நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.12.2022 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments