தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும், நியாயவிலைக் கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- இதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாய விலைக் கடைகளில்
- முதற்கட்டமாக 326 நியாய விலைக் கடைகளில் கடந்த 24.07.2023 முதல் 04.08.2023 வரை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
- இரண்டாம் கட்டமாக 449 நியாய விலைக் கடைகளில் கடந்த 05.08.2023 முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
- இரண்டாம் கட்ட முகாமில் குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தவறியவர்கள் கடைசி இரண்டு நாட்களில் (15.08.2023 மற்றும் 16.08.2023) விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
- தற்போது 15.08.2023-ல் சுதந்திரதினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு 15.08.2023 மற்றும் 16.08.2023 நடைபெறும்.
- விடுபட்டவர்களுக்கான விண்ணப்பப் பதிவை 19.08.2023 (சனிக்கிழமை) மற்றும் 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் சேர்த்து நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் உள்ள 775 மையங்களிலும் நடைபெற்றுள்ள முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அவரவர் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ளது
நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட மையங்களில் 19.08.2023 (சனிக்கிழமை ) மற்றும் 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறும் சிறப்புமுகாம்களில் 21 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள்/தகுதி வாய்ந்த இதர மகளிரில் ஒருவர் விண்ணப்பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவித்துள்ளார்.